தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:49 PM IST (Updated: 19 Nov 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி:
தமிழ்நாடு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றியமைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். நாள்தோறும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும். அனைத்து செவிலியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு 50 சதவீத அடிப்படையில் தாய்-சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story