பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் தொல்லை
கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் இளநிலை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலருக்கு இரவு நேரங்களில் வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல் அனுப்பு தல், இரட்டை அர்த்தத்தில் பேசுதல் போன்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 13-ந் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்து உள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை கமிட்டி அமைப்பதாக கூறி காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை கமிட்டி அமைத்து சம்மந்தப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதற்கிடையே அந்த பேராசிரியர் மீது பாலியல் தொல்லை கொடுத் ததாக மேலும் 4 மாணவிகள் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த பேராசிரியரிடம் விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நிலையில் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து நேற்று மதியம் திடீரென்று கல்லூரி முன்பு திரண்டனர். அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கல்லூரியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை
இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆர்.உலகி மற்றும் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சம்பந்தப் பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆர்.உலகியிடம் கேட்டபோது, பேராசிரியரிடம் ஐ.சி.சி. எனப்படும் உள்புகார் குழு (இன்டேனல் கம்ப்ளைன்ட் கமிட்டி) விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் விசாரணையும் நடந்தது. பேராசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும் உரிமை கல்லூரி கல்வி இயக் குனருக்கு தான் உள்ளது. எனவே கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் உத்தரவுப்படி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு
இதற்கிடையே அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதா தலைமையில் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கோவையில் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் ஐ.சி.சி. கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story