வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்று சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்று சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:44 PM IST (Updated: 19 Nov 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெயர் நீக்கம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 1.1.2022-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்ட வணையில் 1.11.2021 முதல் 30.11.2021 வரையிலான நாட்களில் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி) பதிவிறக்கம் செய்து அதன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். 
சிறப்பு முகாம்
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான கூடுதல் சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் மற்றும் எதிர்வரும் 27-ந் தேதி (சனிக் கிழமை) மற்றும் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. 
எனவே திருத்தங்கள் செய்ய விரும்புபவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story