ஆற்காட்டில் காய்கறி கடைகள் தண்ணீரில் மூழ்கியது


ஆற்காட்டில் காய்கறி கடைகள் தண்ணீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 20 Nov 2021 12:29 AM IST (Updated: 20 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி கடைகள் தண்ணீரில் மூழ்கியது

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான வெள்ள நீர் செல்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ஆற்காடு நகர் பகுதியில் இருந்த மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலையில் உள்ள பாலாற்றின் கரையோரம் அமைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் ஆற்காடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் காய்கறி கடைகள் நடத்தப்படும் இடங்கள் முழுவதும் பாலாற்றின் வெள்ள நீர் செல்வதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் தற்காலிகமாக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 

Next Story