ஆலங்காயம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாட்டி, பேத்தி மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாட்டி, பேத்தி மீட்பு
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் நரசிங்கபுரம் ஏரி முழுவதும் நிரம்பி உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டியும், அவரது 6 வயது பேத்தியும் சாலையை கடந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அருகே இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் இறங்கி மூதாட்டி மற்றும் சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதே போல் நரசிங்கபுரத்தில் இருந்து பால் ஏற்றிக் கொண்டு ஆலங்காயம் நோக்கி சென்ற லாரி வெள்ளத்தில் சிக்கியது. பின்னர் அதிர்ஷ்டவசமாக சாலையை கடந்து சென்றது.
Related Tags :
Next Story