வாணியம்பாடி மலைப்பாதையில் நிலச்சரிவு
வாணியம்பாடி மலைப்பாதையில் நிலச்சரிவு
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே உள்ள மலைப்பகுதி வெலதிகாமணிபெண்டா. இந்த மலைப்பாதை வழியாகத்தான் தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம், தேவராஜபுரம், கர்நாடக மாநிலம் கோலார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா, சிந்தகாமணிபெண்டா, மாதகடப்பா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைப்பாதை 5-வது வளைவு பாதையில் திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடைபட்டது.
இதன்காரணமாக இந்த வழியாக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். பஸ் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதே போல் வாணியம்பாடி பொன்னியம்மன் கோவில் பின்புறத்தில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதியில் மின்டிராஸ்பார்மர், மின்கம்பங்கள் அடியோடு சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களை எம்,எல்,ஏ,க்கள் கோ.செந்தில்குமார், தேவராஜ் ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story