சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 20 Nov 2021 12:49 AM IST (Updated: 20 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

பாளையம்பட்டியில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சந்தன மாரியம்மனுக்கும், விநாயகருக்கும், பாலமுருகனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, செம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை   கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story