வேட்டவலம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 11 பேர் கயிறு கட்டி மீட்பு
வேட்டவலம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 11 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 11 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் துரிஞ்சலாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அரும்பாக்கம் கிராமத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வெள்ளத்தில் பெருமாள், பூங்காவனம், ராமாயி, துரைசாமி சக்திவேல் ஆகியோருக்கு சொந்தமான 6 மாடுகள் 4 கன்றுக்குட்டிகள் 70 நாட்டுக்கோழிகள் வெள்ளத்தில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
அப்பகுதியில் 3 குழந்தைகள் உட்பட11 நபர்கள் 20 மாடுகளுடன் மழை வெள்ளத்தில் நடுவே சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த வேட்டவலம் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தின் குறுக்கே கயிறை கட்டி 11 பேரையும் பத்திரமாக தீ மீட்டனர். மாடுகளும் மீட்கப்பட்டு மேடான பகுதியில் விடப்பட்டன.
மீட்புப் பணிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சர்க்கரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஊராட்சி தலைவர் முனியம்மாள் காமராஜ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story