சாலை பாதுகாப்பு குழு கூட்டம்


சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 1:06 AM IST (Updated: 20 Nov 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்தது.  விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் படந்தால் சந்திப்பு ஆகிய இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் நடவடிக்கையையும், வடமலைக்குறிச்சி சேவை ரோடு அமைக்கும் நடவடிக்கையையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவுபடுத்த வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரி முன்பு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ரகுராமன் மற்றும் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பொதுமக்களிடம் கலந்து பேசி தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தேசிய நெடுஞ்சாலையில் சூலக்கரை மேடு வரை உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கலெக்டர் மேகநாத ரெட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story