குடியாத்தம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்கள்


குடியாத்தம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 20 Nov 2021 1:16 AM IST (Updated: 20 Nov 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

கவுண்டன்ய மகாநதி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்கள்

குடியாத்தம்

குடியாத்தம்  கவுண்டன்ய மகாநதி ஆற்றில் நேற்று  20 ஆயிரம் கனஅடி நீர் பாய்ந்து ஓடியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியை சேர்ந்த நடுக்கட்டை என்ற பகுதியை சுற்றி நான்கு பக்கமும் கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. இந்த நடுக்கெட்டை பகுதியில் 35 குடும்பங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் வசிப்பதாக கூறப்படுகிறது. கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இங்குள்ள சிலர் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். நேற்று 100-க்கும் மேற்பட்டோர் நடுக்கெட்டை பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பி.கே.பியாசி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் வரவழைக்கப்பட்டு, அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் கிராம மக்களை லைப் ஜாக்கெட் அணிவித்து சுமார் 5 மணி நேரம் போராடி நடுகெட்டை பகுதியிலிருந்து மீட்டு மறு கரைக்கு கொண்டு வந்தனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story