கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 1:27 AM IST (Updated: 20 Nov 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைக்குளம்:
அரியலூரில் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும். தடுப்பூசிக்கு இலக்கு நிர்ணயிக்கக்கூடாது. தாய், சேய் நலப்பணிகள் பாதிக்காத வகையில் சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும். கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் நியமனம் செய்யும் கருத்துருவை கைவிட வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Next Story