கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 1:31 AM IST (Updated: 20 Nov 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

மேலநத்தம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
மேலப்பாளையம் போலீசார் மேலநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 20), ஜோதி புரத்தை சேர்ந்த ஜோசப் விஜய் (19), மேல கருங்குளத்தை சேர்ந்த கணேஷ் (19) ஆகியோர் என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story