கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
திருவெறும்பூர்
திருவெறும்பூர் பகுதியில் அதிக அளவில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், ஞானவேலன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குற்ற வழக்கில் தொடர்புடைய கரூர் லாலாப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற வெட்டுசங்கர்(வயது 34), கோபால் என்ற கருப்பத்தூர் கோபால், தொட்டியம் தாலக்குடியை சேர்ந்த செல்வகுமார்(40) ஆகியோருக்கு கொள்ளை சம்பவங்களில் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதில் கருப்பத்தூர் கோபால் சமீபத்தில் கொலை செய்யப்பட்டதும் ெதரியவந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அம்மன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சங்கர் மற்றும் செல்வகுமார் ஆகியோரை திருவெறும்பூர் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கருப்பத்தூர் கோபாலின் மனைவி பொன்னுமணியிடம்(36) இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொன்னுமணி, ஜெகன் (46) ஆகியோரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் திருவெறும்பூர் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story