கொலைக் கைதிகள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


கொலைக் கைதிகள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2021 1:58 AM IST (Updated: 20 Nov 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கொலைக் கைதிகள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி
திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி சின்ராஜ் (வயது 22) என்பவரை சிலர் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் (22), ராக்கி என்ற ராகேஷ் (19), அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் மற்றும் சரத் என்ற சரத்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அலெக்ஸ் மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது சின்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின், ராகேஷ் ஆகியோர் மீது மேலும் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கில்
 இதேபோல திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓயாமரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாக்கியராஜை (39) வழிமறித்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற மணிகண்டனை(23) கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story