கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
குளிர்கால கூட்டத்தொடர்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி நடப்பது வழக்கம். இந்த கூட்டம் பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெறும். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பெலகாவியில் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 13-ந் தேதி பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் தொடங்கும் என்று கவர்னர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மந்திரிசபை முடிவு செய்து கவர்னருக்கு தெரிவிப்பது மரபு. ஆனால் தற்போது மேல்-சபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அதுகுறித்த தகவலை அரசு பகிரங்கப்படுத்தவில்லை.
வட கர்நாடக பிரச்சினைகள்
மாநில அரசு தெரிவித்ததை அடுத்து கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. கடைசியாக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமாக வட கர்நாடகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
குறிப்பாக கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும். ஏனென்றால் அந்த பகுதியில் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தொடரில் பிட்காயின் முறைகேடு குறித்து காங்கிரஸ் பிரச்சினை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதனால் இந்த கூட்டத்தொடரில் சூடான விவாதங்கள் நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story