புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 3:08 AM IST (Updated: 20 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

உவரியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
உவரியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆரியங்காவூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 33), அடைக்கலப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story