தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Nov 2021 3:46 AM IST (Updated: 20 Nov 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சேதமடைந்த சாலை
நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து கீழக்கலுங்கடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                           -முரளி, கீழக்கலுங்கடி.
குளம் உடையும் அபாயம்
ஆரல்வாய்மொழியில் பொய்கை குளம் உள்ளது. விவசாயிகள் நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தின் கரை முழுவதும் தார் சாலை அமைக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த 200 பேர் தினமும் காலை, மாலை இந்த சாலையில் நடைபயிற்சி செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் குளம் நிரம்பியது. இதனால், குளத்தின் மேற்கு பகுதி கரையில் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. விபத்து ஏற்படாமல் தடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து சாலையில் அரிப்பு ஏற்பட்டு வருவதால் குளம் உடையும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் குளத்தின் கரையையும், சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -முருகன், வடக்கூர்.  
விபத்து அபாயம்
ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்தறைகாலனியில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பின்னர், அந்த நீர்தேக்க தொட்டி சேதமடைந்ததால் செம்பொன்விளையில் புதிய நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், பத்தறைகாலனியில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படும் தொட்டியை அகற்றவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                 -ரவி, ரீத்தாபுரம்.
நல்லி சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் பொட்டல் விலக்கு பகுதியில் இருந்து காரவிளை செல்லும் சாலையில் சம்புகுளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் நல்லி உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் சேதமடைந்த நல்லியை மாற்றி புதிய நல்லியை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த துறையினரையும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பாலத்தை விரிவு படுத்த வேண்டும்
வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலப்பள்ளம் கிராமத்தில் துவலாறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் அமைந்துள்ளது. ஆனால், இந்த பாலம் விவசாயிகள் நடந்து செல்ல மட்டும் உதவுகிறது. விளைநிலங்களுக்கு வாகனங்களில் உரங்களை கொண்டு செல்லவோ, அறுவடை செய்த பயிர்களை எடுத்து வரவோ, நடவு மற்றும் அறுவடை எந்திரங்களை கொண்டு செல்லவோ முடிவதில்லை. இதனால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, விவசாயிகள் நலன் கருதி பாலத்தை விரிவு படுத்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
                                 -தங்கமரியான், பண்டாரக்காடு.


Next Story