கொரோனாவுக்கு மூதாட்டி பலி-மேலும் 42 பேருக்கு பாதிப்பு


கொரோனாவுக்கு மூதாட்டி பலி-மேலும் 42 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2021 4:30 AM IST (Updated: 20 Nov 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். மேலும் 42 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 43 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 பேர், சேலம் ஒன்றியத்தில் 13 பேர், ஆத்தூர் பகுதிகளில் 6 பேர், மேட்டூரில் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், ஈரோடு, திருச்சியில் இருந்து வந்த தலா 3 பேர், தர்மபுரி, கோவையில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 59 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 507 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். இவர் உள்பட கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story