நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் பலி


நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் பலி
x
தினத்தந்தி 20 Nov 2021 4:56 AM IST (Updated: 20 Nov 2021 4:56 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

குளச்சல்:
குளச்சல் அருகே நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.
மீனவர்
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜான் (வயது 65). இவர் சொந்தமாக விசைபடகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.
இவரது படகில் குளச்சல் மீன்பிடித்தொழிலாளி மரிய ஜான்(64) உள்பட 13 பேர் கடந்த 17-ந் தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நடுக்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
சாவு 
நேற்று காலை 9 மணியளவில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, சுமார் 30 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரிய ஜான் நடுக்கடலில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, மரிய ஜான் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்கள்.
போலீசார் விசாரணை
இதுபற்றி விசைப்படகு உரிமையாளர் ஜான் குளச்சல் கடலோர காவல்படை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலில் தவறி விழுந்து இறந்த மரிய ஜானுக்கு ரோஸ்மேரி (55) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குளச்சல் துறைமுக பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story