தொடர் மழை காரணமாக வரத்து குறைந்தது ராயக்கோட்டை மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ 80க்கு விற்பனை
தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் ராயக்கோட்டை மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராயக்கோட்டை:
தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் ராயக்கோட்டை மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி ெசய்து வருகின்றனர். இந்த தக்காளிகளை அறுவடை செய்து ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
ராயக்கோட்டை பகுதியில் தொடர் மழை காரணமாக தோட்டங்களில் தக்காளிகள் அழுக தொடங்கி உள்ளன. மேலும் தக்காளிகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த 15 நாட்களாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் தக்காளிகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி அட்டை பெட்டிகளில் நிரப்பி வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வரத்து குறைந்ததால் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் நேற்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
மேலும் சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story