தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரதீப், கோவிந்தன், சிபிசேகரன், மணி, முத்துதமிழ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுசெயலாளர் மணி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து பேசினார்கள்.
கொரோனா காலத்தில் பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்தினர். தேர்வுகளையும் ஆன்லைன் வழியாக நடத்தினார்கள். தற்போதும் பாடங்களை ஆன்லைன் வழியாக நடத்தி வருவதால் கல்லூரி தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story