கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 20 Nov 2021 10:10 AM IST (Updated: 20 Nov 2021 10:10 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பெண்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தர்மபுரி:
தர்மபுரி பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பெண்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கார்த்திகை தீப திருவிழா
தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்தில் கோவில் அர்ச்சகர் மகா தீபம் ஏற்றினார். தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் சாமி கோயில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது சிறப்பு யாக பூஜையும் சொக்கப்பனை எரிக்கப்பட்டு சாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தென்கரைக்கோட்டை
கடத்தூர் அருகே உள்ள தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Next Story