மெரினாவில் மாணவர்கள் போராட்டம் என வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


மெரினாவில் மாணவர்கள் போராட்டம் என வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2021 3:17 PM IST (Updated: 20 Nov 2021 3:17 PM IST)
t-max-icont-min-icon

இணையவழி தேர்வு பிரச்சினை முடிவுக்கு வந்தநிலையில் மெரினாவில் மாணவர்கள் போராட்டம் என வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாணவ பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பின்னர் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவது என்று முடிவு செய்து அதனை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் சிலர் சமூக வலைதளங்களில், இணையதளம் வழியாக தேர்வு நடத்தக்கோரி 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் மெரினா கடற்கரைக்கு போராட்டம் நடத்த வரும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது. மாணவர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story