மினி லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
பூந்தமல்லி அருகே மினி லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
ஆவடி,
நெல்லையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). எலக்ட்ரீசியனான இவர், சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை அவரது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு ஆவடி அடுத்த வீராபுரம் அருகே வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். அந்த வழியாக வந்த மினிலாரி அவரது உடலின் நடுபகுதியில் ஏறி இறங்கியது. மினி லாரி சக்கரத்தில் சிக்கிய சதீஷ்குமார் உடல் நசுங்கி இரண்டு துண்டானது. சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான ஆவடி கோவில்பதாகை பகுதியை சேர்ந்த சுப்பையா (63) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story