கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 4:33 PM IST (Updated: 20 Nov 2021 4:33 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு,

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நர்சுகள் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொதுச்செயலாளர் சுமதி தலைமை தாங்கினார், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் முத்துபாண்டி முன்னிலை வகித்தனர். முழுவீரிய தன்மையுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்திடவும், மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்திட வலியுறுத்துவதை தவிர்த்திட கோரியும், தடுப்பூசி உள்பட நாள்தோறும் இலக்கு நிர்ணயம் செய்து கட்டாயப்படுத்தும் போக்கை கைவிட கோரியும், தாய் சேய் நலப்பணி பாதிக்காத வகையில், சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பணிபுரிய வகை செய்யக்கோரியும், கனமழையிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதை தவிர்த்திடவும், விடுபட்டுள்ள கிராம, பகுதி, சமுதாய ககாதார நர்சுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கிடவும், ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்துவதை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்திட கோரி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரே கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் காவலான் கேட் பகுதியில் நர்சுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதி்ல் மாநில தலைவர் அமுதவல்லி, மாநில இணைச் செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

உண்ணாவிரதத்தின் போது கோரிக்கைகளை விளக்கி கோஷங்களையும் எழுப்பினார்கள். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பவானி, மாவட்ட செயலாளர் பிரேமா, மாவட்ட பொருளாளர் தாட்சாயணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story