ஆயுதப்படை போலீசாருக்கு நீரழிவு பரிசோதனை முகாம்
தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கு நீரழிவு பரிசோதனை முகாம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் போலீசாருக்கான இலவச நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நீரிழிவு நோய் குறித்து இந்திரா, நீரிழிவு நோய் மைய டாக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், “தற்போது நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வயதானவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்களுக்கும் வரக்கூடிய சூழல் உள்ளது. இதற்கு நமது கட்டுப்பாடற்ற உணவு பழக்கங்களும் ஒரு காரணமாக உள்ளது. அவ்வப்போது நாம் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, அதில் குறைபாடுகள் இருந்தால், உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த நாம் உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, இளங்கோவன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story