டி.வி. வெடித்து தாய், மகன் காயம்
டி.வி. வெடித்து தாய், மகன் காயம்
கூடலூர்
கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்தது. அப்போது இரவு 8 மணிக்கு ஆமைகுளம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரது வீட்டை மின்னல் தாக்கியது. தொடர்ந்து வீட்டில் வைத்திருந்த டி.வி. மற்றும் செட்டாப் பாக்ஸ் வெடித்து சிதறியது.
அப்போது வீட்டுக்குள் இருந்த தினேஷின் மனைவி கிருஷ்ணவேணி(வயது 27), மகன் யுவனேஸ்வரன்(10) ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் உறவினர்கள் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story