14 வாகனங்கள் பறிமுதல்; ரூ.1½ லட்சம் அபராதம்
நாகையில் விதிமுறைகளை மீறியதாக 14 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்து, ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தார்
வெளிப்பாளையம்:
நாகையில் விதிமுறைகளை மீறியதாக 14 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்து, ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தார்.
ஆய்வு
நாகை வட்டார போக்குவரத்து எல்லைக்குள் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.
இதில் அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், தகுதி சான்று, காப்புச்சான்று, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், அதிக நபர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் என விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
14 வாகனங்கள் பறிமுதல்
இந்த ஆய்வில் விதிமுறைகளை மீறியதாக 12 ஆட்டோக்கள், அனுமதியின்றி பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன், ஒரு சரக்கு வாகனம் என மொத்தம் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story