தேசிய நூலக வார விழா; மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பங்கேற்பு


தேசிய நூலக வார விழா; மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Nov 2021 9:10 PM IST (Updated: 20 Nov 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தேசிய நூலக வார விழா நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பங்கேற்றார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. விழா நிறைவுநாள் விழா நேற்று மைய நூலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். நூலகர் ராம்சங்கர் வரவேற்று பேசினார். அரிமா சங்க தலைவர் சுரேஷ் தங்கராயப்பன், வாசகர் வட்ட துணைத்தலைவர் முகமது ஷெரீப், கோ.எழிலன் ஆகியோர் பேசினர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவா் பேசுகையில், நூலகத்துக்கு சென்று படித்தால் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறலாம். மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள நூலகத்தை பயன்படுத்துங்கள்” என்றார்.
விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சங்கரன் நன்றி கூறினார்.

Next Story