மணல் திருடிய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது


மணல் திருடிய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 9:16 PM IST (Updated: 20 Nov 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

முறப்பநாடு அருகே மணல் திருடிய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
முறப்பநாடு அருகே அகரம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 14.9.2017 அன்று சட்டவிரோதமாக லாரியில் மணல் திருடிய வழக்கில் அகரம் பகுதியை சேர்ந்த நயினார் மகன் கோபால் (வயது 45) என்பவர் தலைமறைவானார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தலைமறைவாக இருந்த கோபாலை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கோபாலை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story