பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறை கேட்பு


பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறை கேட்பு
x
தினத்தந்தி 20 Nov 2021 9:25 PM IST (Updated: 20 Nov 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே சண்முகையா எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழதட்டப்பாறை, மேலதட்டப்பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வேலை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை அனைத்தையும் கேட்டுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாக சரி செய்து தருமாறு வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story