ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2021 10:30 PM IST (Updated: 20 Nov 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கம்பம்:
கம்பம் கெஞ்சையன்குளத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). ஜீப் டிரைவர். இவருக்கு தாரணி என்ற வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் பிரகாஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை உறவினர்கள் கண்டித்தனர். இருப்பினும் அவரால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை. 
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பிரகாஷ் சம்பவத்தன்று விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரகாஷ் இறந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story