இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது


இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 10:40 PM IST (Updated: 20 Nov 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

நல்லூர், 
திருப்பூர், முத்தணம்பாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் ஜெகநாதன் (வயது35). இவர் நேற்று முன்தினம் நல்லூர், காங்கேயம் ரோடு பெட்ரோல் வி்ற்பனை நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. இது அவர் நல்லூர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விஜயாபுரம், மருதப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேந்தர்  (22) அந்த வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. நேற்று சுரேந்திரை பிடித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story