காட்டுமன்னார்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்


காட்டுமன்னார்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 10:59 PM IST (Updated: 20 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு காட்டுமன்னார்கோவில் தொகுதி தலைவர் அகமதுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜபருல்லா, நஜிமுதீன், முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் புரோஜ அகமது., துணைத்தலைவர் சர்புதீன் சரிப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் பயாஜ்அகமது ஆகியோர் கலந்து கொண்டு, பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை கட்டுப்படுத்தாத மத்திய மற்றும்  மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

 முன்னதாக, போராட்டத்தின் போது, மோட்டார் சைக்கிளுக்கு மாலை் அணிவித்து,  கயிறு கட்டி இழுத்து ஊர்வலமாக சென்றனர். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜாக்கிர் உசேன், முகமது அலி, நாசர் அலி, மக்பூல அகமது  உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொது செயலாளர் இதாயத்துல்லா நன்றி கூறினார்.

Next Story