சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்தது


சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 20 Nov 2021 11:02 PM IST (Updated: 20 Nov 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்தது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரத்தை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள 100 வீடுகளில் வசித்தவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். இது பற்றி அறிந்ததும் ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் நேரில் சென்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, வாய்க்கால் போல் ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அப்போது மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) மாதேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், தாசில்தார் விஜயபிரபாகரன், பொறியாளர் சாமிதுரை, மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுவங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story