ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா உருவபொம்மை எரித்து பா.ம.க.வினர் போராட்டம்


ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா உருவபொம்மை எரித்து பா.ம.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 11:08 PM IST (Updated: 20 Nov 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா உருவபொம்மையை எரித்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநத்தம்,


நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகவும், இழிவு படுத்தியதாகவும் இதனால் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடிகர் சூர்யா மற்றும் அந்த படத்தின் திரைப்பட இயக்குனர் மீது போலீஸ் நிலையங்களில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.


அந்த வகையில்  ராமநத்தம் பஸ் நிலையத்தில் பா.ம.க. மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் அங்கமுத்து, சரவணன் ஆகியோர் தலைமையில், நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ராமநத்தம் போலீசில் இது தொடர்பாக புகார் மனுவையும் அவர்கள் அளித்தனர்.

இதில் மாவட்ட துணை தலைவர் உதயகுமார் ,மாநில செயற்குழு உறுப்பினர் வீர கோவிந்தன், ஒன்றிய தலைவர் சாந்தப்பன், வன்னியர் சங்க தலைவர் சந்தோஷ், மாவட்ட நிர்வாகி ரமேஷ் மற்றும் அறிவு கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story