திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தற்கொலை
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் கனகராஜ்(வயது 26). ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினரான இவருக்கு அவரது தந்தை செல்வராஜ் அதே ஊரில் பெண் பார்த்து அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தனதுவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால் மன உளைச்சலில் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story