தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை


தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2021 11:35 PM IST (Updated: 20 Nov 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிங்கம்புணரி, 
தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆ.காளாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு முத்துமீனாட்சி (வயது 18) என்ற மகள் மற்றும் மகன் உள்ளனர். முத்துமீனாட்சி பொன்னமராவதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சசிகுமார் திடீரென உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
 தந்தை இறந்த துக்கத்தில் முத்துமீனாட்சி மனம் உடைந்து சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆ.காளாப்பூர் வீட்டில் முத்துமீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டார். 
விசாரணை
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே விரைந்து சென்று எஸ்.வி. மங்களம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து முத்துமீனாட்சி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story