மூலங்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா


மூலங்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா
x
தினத்தந்தி 20 Nov 2021 11:48 PM IST (Updated: 20 Nov 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே மூலங்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே, மூலங்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
கனரக வாகனங்கள்
கூத்தாநல்லூர் அருகே, திருவாரூர்- மன்னார்குடி சாலையில் இடையே  மூலங்குடி கிராமம் உள்ளது. மூலங்குடியை மையமாக கொண்டு, வடபாதிமங்கலம் சாலை, திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை என 3 பிரிவு சாலை ஏற்படுத்தப்பட்டது. இந்த சாலை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி போன்ற முக்கிய நகர பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. இதனால் இந்த சாலை மக்கள் பயன்பாட்டில் முக்கிய இடம் பிடிக்கிறது. 
வேகத்தடை
 மூலங்குடி முகப்பில் ஆபத்தான 3 வளைவுகள் உள்ளன. இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். இங்கு வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் வேகமாக சென்று விபத்துக்களை ஏற்படுகிறது. எனவே, மூலங்குடி மூன்று பிரிவு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story