விழுப்புரம் திண்டிவனத்தில் 18000 கோழிகள் செத்தன


விழுப்புரம் திண்டிவனத்தில்  18000 கோழிகள் செத்தன
x
தினத்தந்தி 20 Nov 2021 11:54 PM IST (Updated: 20 Nov 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் திண்டிவனத்தில் 18000 கோழிகள் செத்தன

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. விழுப்புரம் அருகே நரசிங்கபுரம் பகுதியில் பெருமாள், வெங்கடபதி ஆகியோருக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதில் பெருமாள் கோழிப்பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகளும், வெங்கடபதி கோழிப்பண்ணையில் இருந்த 5,500 கோழிகளும் நீரில் மூழ்கி செத்தன. மேலும் சின்னமடம் பகுதியில் ராமதாஸ் என்பவருடைய கோழிப்பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததில் அங்கிருந்த 4 ஆயிரம் கோழிகளும் செத்தன. இதனால் பெருமாள் உள்ளிட்ட 3 பேருக்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல் திண்டிவனம் அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் வேல்முருகன்(வயது 38) என்பவரின் கோழிப்பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 3,500 கோழி குஞ்சுகள் நீரில் மூழ்கி செத்தன.

Next Story