இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Nov 2021 12:16 AM IST (Updated: 21 Nov 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமைபடுத்தியதாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர், 
கரூர் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- செல்லாண்டி பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பவருக்கும், எனக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவர் செந்தில்குமார் மற்றும் அவரின் தாயார் மாரியம்மாள் (54), தந்தை முருகேசன் (58), சகோதரி சபரி தேவி (31), சகோதரர் சிவ செல்வன் (45) ஆகிய 5 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story