அச்சக உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 3 பேர் கைது; தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு


அச்சக உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 3 பேர் கைது; தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Nov 2021 12:22 AM IST (Updated: 21 Nov 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

அச்சக உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,
அச்சக உரிமையாளர்
கரூர் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது 58), அச்சக உரிமையாளர். சம்பவத்தன்று இரவு இவருடைய வீட்டிற்குள் 5 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் புகுந்து திருட முயன்றனர். 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலதண்டாயுதபாணி திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். 
3 பேர் கைது
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் காந்தி கிராமத்தை சேர்ந்த ரத்தினகிரீஸ்வரர் (25), பெரியசாமி (19), தினேஷ் குமார் (24) என்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய வெள்ளையன், பாலு ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story