‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின் விளக்குகள் எரியுமா?
தஞ்சை அருகே நீலகிரி ஊராட்சியில் கருப்ஸ் நகர் 3-வது தெருவில் மின்விளக்குகள் கடந்த சில வருடங்களாக எரிவது கிடையாது. இதனால் பொது மக்கள் இரவில் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்த பகுதியில் பல முறை வழிப்பறி சம்பங்கள் நடந்து உள்ளன. இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்கள் நலன் கருதி நீலகிரி ஊராட்சி கருப்ஸ் நகர் 3-வது தெருவில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கருப்ஸ் நகர், பொதுமக்கள்.
சாலை வசதி வேண்டும்
தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் ரோட்டில் உள்ள கோபாலபுரம் விரிவாக்கம் பகுதியில் பல ஆண்டுகளாக தார்ச்சாலை வசதி இல்லாமல் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் மழை தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செபஸ்டின், கோபாலபுரம்.
செயல்படாத கண்காணிப்பு கேமரா
பள்ளி அக்ரஹாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலசரக்கு கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளம் உள்ளன. இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ள நிலையில் காவல்துறை சார்பில் பள்ளி அக்ரஹாரம் சுங்கான் கேட்டு பிரிவு சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. அந்த கேமரா பல மாதங்களாக செயல்படவில்லை. இதனால் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி இந்த பகுதியில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-முருகேசன், பள்ளி அக்ரஹாரம்.
Related Tags :
Next Story