கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை நகராட்சி கெல்லிஸ் ரோடு, ஒத்தவாடை தெரு, ஓட்டேரி, வாலாஜா நகராட்சி கச்சால் தெரு, காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவ குழுவினருடன் இணைந்து பணியாற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் எவ்வளவு வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்ட பட்டியலின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அழைத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள டோக்கன் வழங்கிய விவரங்களை கேட்டறிந்தார்.
பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு வாரியாக கட்டாயம் ஒவ்வொரு குழுவும் 200 நபர்கள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நடவடிக்கையை பின்பற்றாமல் தன்னிச்சையாக பணியினை செய்து வந்த பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி பணியினை திறம்பட செய்ய உத்தரவிட்டார்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தவற விடாமல் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி அடுத்தகட்டமாக அதேபோல மேற்கொள்ள வேண்டும். இந்த பணியில் சுணக்கம் காண்பிக்க வேண்டாம். ராணிப்பேட்டை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது என்பதை உணர்ந்து பணியாளர்கள் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர்கள் ஜெயராம ராஜா, மகேஸ்வரி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், நெமிலி தாசில்தார் ரவி, சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
காவேரிப்பாக்கத்தில்
வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிைய கலெக்டர் திடீர் ஆய்வு
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்தீஸ்வரன் கோவில் தெரு, கவரத்தெருவில் உள்பட பல தெருக்களில் நர்சுகள் வீடு வீடாக சென்று கொேரானா தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தனர்.
அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story