ஆடுகள் திருடிய 2 பேர் கைது
ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மயிலாண்டன் கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (37), வெங்கடேசன் (35) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள உபயோகமற்ற பழைய கட்டிடத்தின் அருகே கட்டி இருந்தனர். நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் எழுந்து வந்து பார்த்தபோது, 2 பேர் ஆடுகளை திருடி தங்களது மொபட்டில் கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது நண்பருடன் மொபட்டில் அவர்களை துரத்திச் சென்று, ரெட்டிபாளையம் அருகே மடக்கிப்பிடித்து, விக்கிரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், மயிலாண்டன் கோட்டையை சேர்ந்த கொளஞ்சிநாதன் (29), கோவிந்தபுரத்தை சேர்ந்த ரகுநாத் (23) என்பதும் தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்து 2 ஆடுகளை மீட்டார். மேலும் அவர்களுடைய மொபட்டை பறிமுதல் செய்தார். பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story