‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் இருந்து மேச்சேரி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்வது மிகவும் ஆபத்தானது. இந்த சாலை வழியாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் சிரமங்களை போக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்கப்பட வேண்டும்.
-ஊர்மக்கள், தொப்பூர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ெஜட்டிஅள்ளி ஊராட்சி தேங்காமரத்துபட்டி-தொழில் மையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த குண்டும்-குழியுமான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கா.குணசீலன், ஏ.ஜெட்டிஅள்ளி, தர்மபுரி.
===
குரங்குகள் அட்டகாசம்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா செங்கரடு கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. சுமார் 60-க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் கூரை மேல் ஏறி ஓடுகளை பிரித்து உள்ளே சென்று விடுகிறது. வீட்டின் உள்ளே அரிசி, பருப்பு என அனைத்தையும் கீழே சிதறிவிட்டு செல்கிறது. குரங்குகளை விரட்டினால் மேலே பாய்ந்து கடிக்க வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், செங்கரடு, சேலம்.
===
சாலையை ஆக்கிரமித்த மரக்கிளைகள்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராம சாலையை மறைத்தபடி முட்புதர்கள் மற்றும் மரக்கிளைகள் படர்ந்து காணப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி வாகனம் மற்றும் இதர வாகனங்களின் ஜன்னல்களை அவைகள் உராய்ந்து செல்கின்றன. இதனால் வாகனத்தில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. எனவே சாலையில் உள்ள முட்புதர்கள், மரக்கிளையை அகற்றுவார்களா?
-ஊர்மக்கள், கடத்தூர், தர்மபுரி.
ஆறாக ஓடும் சாக்கடை நீர்
சேலம் சங்கர் நகர் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சாக்கடையை சரி செய்தால் நோய்கள் பரவுவதை தவிர்க்கலாம்.
-ஊர்மக்கள், சங்கர் நகர், சேலம்.
ஆஸ்பத்திரியில் தேங்கி உள்ள மழைநீர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் வெளியேற வாய்க்கால் இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகம் உற்பத்தியாகி விட்டது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆஸ்பத்திரியில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பென்னாகரம்.
----
தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றும் தெருநாய்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தினமும் பலர் தெருநாய்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பயணிகளை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சூளகிரி.
===
சாலை விரிவுப்படுத்தப்படுமா?
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் புதிய பஸ் நிலையம் அருகில் சாலையோர மற்றும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்துவார்களா?
-ஊர்மக்கள், வாழப்பாடி, சேலம்.
====
நவீன கழிப்பிடம் வேண்டும்
தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேடு பகுதியிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காகவும், உள்நோயாளிகளை பார்க்கவும் தினமும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு ஆஸ்பத்திரியில் முறையான கழிப்பிட வசதி இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஊர்மக்கள், கச்சேரிமேடு, தர்மபுரி.
சேறும்,சகதியுமான சாலை
சேலம் மாவட்டம் எடப்பாடி ஆவணியூர் கீழ்முகம், மாசையன் தெருவில் மண் சாலை உள்ளது. இங்கு இதுவரை தார் சாலையே போடப்படவில்லை. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைப்பதுடன், அங்கு கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாயும் அமைக்க முன்வர வேண்டும்.
-ஊர்மக்கள், ஆவணியூர் கீழ்முகம், சேலம்.
Related Tags :
Next Story