சேலம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு பாதிப்பு-கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 41 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 பேர், சேலம் ஒன்றியத்தில் 14 பேர், ஆத்தூர் பகுதிகளில் 4 பேர், மேட்டூரில் 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்துக்கு ஈரோடு, நாமக்கல்லில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 489 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இறந்தார். மேலும் சேலத்தை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,697 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story