திருச்சியில் தனியார் கல்லூரி பஸ் மோதி, ஆசிரியை பலி
திருச்சியில் தனியார் கல்லூரி பஸ் மோதி, ஆசிரியை பலியானார்.
திருச்சி
திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப பிள்ளை ஆனந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 49). இவர், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பாரதியார் சாலையில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவர், தினமும் பள்ளிக்கு தனது ஸ்கூட்டரில் சென்று விட்டு மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். திருச்சி கோர்ட்டு அருகில் தில்லைநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் ஆஸ்பத்திரி அருகே காலை 8.15 மணிக்கு வந்தபோது, அவ்வழியே வந்த தனியார் கல்லூரி பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை மங்கையர்கரசி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கு விடுமுறை
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்று மதியத்திற்கு பின்னர் அப்பள்ளிக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது.
Related Tags :
Next Story