10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது


10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2021 2:04 AM IST (Updated: 21 Nov 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில், 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது. அந்த மாணவியை கற்பழித்து தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு: மங்களூருவில், 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது. அந்த மாணவியை கற்பழித்து தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி கர்ப்பம்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவளது உடல் மாற்றத்தில், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பெற்றோர், மகளை மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். 

அப்போது டாக்டர், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினார். அதில் மாணவி, நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதைகேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

பெண் குழந்தை பிறந்தது

இதுபற்றி உப்பினங்கடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் மாணவியை, அதேபகுதியை சேர்ந்த கேசவா(வயது 34) என்ற வாலிபர் கற்பழித்ததும், இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை, பிரசவத்திற்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாணவிக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

வாலிபர் கைது

இதற்கிடையே மாணவியை கற்பழித்து தாயாக்கிய கேசவாவை உப்பினங்கடி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story