குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருண் உலகநாதன் (வயது 42). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த பலவேசக்கண்ணு என்பவரின் மகன் வள்ளி என்ற வள்ளிநாயகம் (31). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்கள் 2 பேரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டா். அதன்படி நேற்று 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story